மகளிர் உரிமைத்தொகை 14ம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்படும்

539பார்த்தது
மகளிர் உரிமைத்தொகை 14ம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்படும்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு, இம்மாதம் 14ம் தேதி ரூ. 1000 வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ. 1, 000 பெற்று பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ. 1, 000 வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை கடந்த மாதம் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கிடையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் ரூ. 1, 000 வங்கி கணக்கிற்கு வராத குடும்பத் தலைவிகள், இ-சேவை மையங்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்களில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த மாதம் 14ம் தேதியே அவர்களுடைய வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒருநாள் முன்கூட்டியே பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ. 1, 000 வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி