மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்கல்

58பார்த்தது
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்கல்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் மகளிர் நலத் திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி