திமுக MLAக்களுக்கு அனுப்பிய உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட் அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்றதாக மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த உடன், அது ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது.