மின் பயனாளர்களே இதை நம்ப வேண்டாம்
கட்டணம் செலுத்தாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம். முதலில் உங்கள் கட்டண நிலையினை மின்வாரிய வலைதளம்/ செயலியில் சரி பார்க்க வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மோசடி கும்பல், இதுபோன்ற குறுஞ்செய்தியை அனுப்பி, தனிப்பட்ட தகவலை திருடி மோசடி செய்கின்றன. எனவே, குறுஞ்செய்தி வந்த எண்ணை அழைக்கவோ/ பணம் செலுத்தவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.