பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிதியுதவி

60பார்த்தது
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிதியுதவி
சென்னை: அதிரப்பள்ளி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அதிரப்பள்ளி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் 13 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். சம்பவத்தை அறிந்தவுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர்களை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு தலா மூன்று லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50, 000 முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்தி