தமிழகப் பிரிவைச் சேர்ந்த 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலர் முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 2001ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மை செயலாளராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையர் டி. என். வெங்கடேஷ், முதல்வரின் முதல்நிலை செயலர் பி. உமாநாத், தில்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராஜேந்திர ரத்னூ, உணவுப் பாதுகாப்பு ஆணையர் ஆர். லால்வேனா, ஆளுநரின் செயலர் ஆர். கிர்லோஷ் குமார் ஆகியோர் முதன்மைச் செயலர் அந்தஸ்தில் பதவி உயர்வு பெற்றுள்ளனர். 2025ம் ஆண்டு முதல் இந்த பதவி உயர்வு அமலுக்கு வருகிறது. இவ்வாறு உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார்.