அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் என, அமைச்சர் ரகுபதி அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு உண்மையான தொண்டர்கள் வந்தால், திமுக 2 மடங்கு வலிமையாகிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுப்பதால், அக்கட்சி தற்போது ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும், கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகளே, அவருக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.