மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பைக் குறைக்க மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டண உயர்வை மக்கள் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும் என வினவியுள்ளார்.