தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 53 லட்சம் பேர்

50பார்த்தது
தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 53 லட்சம் பேர்
தமிழகத்தில் அரசு வேலைக்காக 53. 48 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

2024, மே 31-ம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்களின் மொத்த எண்ணிக்கை 53 லட்சத்து 48 ஆயிரத்து 663 ஆகும்.

மேலும், பதிவுதாரர்களில் 19 முதல் 30 வயதுள்ளவர்கள் 23 லட்சத்து 27 ஆயிரத்து 649 பேர். 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 16 லட்சத்து 93 ஆயிரத்து 40 பேர். 46 வயது முதல் 60 வயது வரை உள்ளோர் 2 லட்சத்து 47 ஆயிரத்து 811 பேர். பிஎட் முடித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 85 ஆயிரத்து 622 ஆகவும், பிஎட் முடித்த முதுகலை பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 79 ஆகவும் உள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 955 பேர். ஐடிஐ முடித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 825 ஆக உள்ளது. மேலும், பிஇ, பிடெக் முடித்துவிட்டு 2 லட்சத்து 37 ஆயிரத்து 525 பேரும், எம்இ, எம்டெக் படித்துவிட்டு 2 லட்சத்து 6 ஆயிரத்து 544 பேரும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Job Suitcase

Jobs near you