ரயில்வே பொறியியல் பணி: விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

69பார்த்தது
ரயில்வே பொறியியல் பணி: விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்
தென் மத்திய ரயில்வேயில் விஜயவாடா யார்டில் பொறியியல் பணி காரணமாக 8 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரலுக்கு ஆக. 4 முதல் ஆக. 11 வரை அதிகாலை 4. 55மணிக்கு இயக்கப்படும் விரைவுரயில் (17237), மறு மார்க்கமாக, சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டாவுக்கு ஆக. 4 முதல் ஆக. 11 வரைமாலை 4. 30 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (17238) ஆகிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

ஆந்திர மாநிலம் விஜயவாடா - சென்னை சென்ட்ரலுக்கு ஆக. 5முதல் ஆக. 10 வரை காலை 6. 10மணிக்கு இயக்கப்படும்பினாகினி விரைவு ரயில் (12711), சென்னைசென்ட்ரல் - விஜயவாடாவுக்கு ஆக. 5 முதல் ஆக. 10 வரை மதியம் 2. 05 மணிக்கு இயக்கப்படும் விரைவுரயில் (12712), சென்னை சென்ட்ரல் - விஜயவாடாவுக்கு ஆக. 5, 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் காலை 7. 25 மணிக்கு இயக்கப்படும் ஜன் சதாப்திவிரைவு ரயில் (12077), விஜயவாடா - சென்னை சென்ட்ரலுக்கு ஆக. 5, 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில்பிற்பகல் 3. 30 மணிக்கு இயக்கப்படும் ஜன்சதாப்தி விரைவு ரயில் (12078) ஆகிய4 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இதுதவிர, 2 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி