சென்னை: அருணன் உட்பட 6 பேருக்கு கருணாநிதி பொற்கிழி விருது அறிவிப்பு

64பார்த்தது
புத்தகக் கண்காட்சியில் பேராசிரியர் அருணன் உட்பட 6 பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னையில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியில் பேராசிரியர் அருணனுக்கு உரைநடைக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. கலைராணிக்கு நாடகத்துக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. என். ஸ்ரீராமுக்கு சிறுகதைகளுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. நெல்லை ஜெயந்தாவுக்கு கவிதைக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. சுரேஷ் குமார் இந்திரஜித்துக்கு நாவலுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. 

நிர்மால்யாவுக்கு மொழிபெயர்ப்புக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்படுகிறது. அதேபோல பபாசி விருது பெறுவோர் பட்டியல்:* சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க. கணாதி விருது - கற்பகம் புத்தகாலயம்* சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் விருது - பெல் கோ* சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருது - எழுத்தாளர் ஜோதி சுந்தரேசன்* சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது - முனைவர் சபா. அருணாச்சலம்* சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது - பேராசிரியர் பர்வீன் சுல்தானா

தொடர்புடைய செய்தி