சென்னையில் குடிநீர் தட்டுப்பாடுஏற்படாத வகையில் புதிதாகவளைவு திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் இதுவரை ரூ. 2, 080கோடிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அமைச்சர் கே. என். நேரு: நகராட்சி நிர்வாகத் துறைக்கு தனியாக 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். சுகாதாரத் துறைபோல, பணி நீட்டிப்பு முறையில் மருத்துவர்கள் தொடர்ந்து பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சர் அன்பில் மகேஸ்: பேராசிரியர் அன்பழகன் பள்ளிமேம்பாட்டு திட்டத்தில் ரூ. 7, 500 கோடி ஒதுக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் கழிவறைகள் உட்பட 18ஆயிரம் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவரை 3, 601 வகுப்பறைகள், 21 ஆய்வகங்கள், 154 யூனிட் கழிப்பறைகள், 700 மீட்டர் நீளத்துக்கு சுற்றுச்சுவர், கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட 5 நூலகங்கள் என மொத்தம் ரூ. 2, 080 கோடிக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
3, 600 வகுப்பறைகள், 105 ஆய்வகங்கள், 191 கழிப்பறைகள், 2. 1 கி. மீ. நீளத்துக்கு சுற்றுச்சுவர், தலா 5 மாணவர், மாணவியர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.