தொழிலதிபர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

76பார்த்தது
தொழிலதிபர் ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
ஊடக நிறுவனரும், தொழிலதிபருமான ராமோஜி ராவ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ராமோஜி குழும நிறுவனர் பத்ம விபூஷன் ராமோஜி ராவ் அவர்களின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். ஊடகம், இதழியல், திரைப்படத் துறைகளுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்புகள் வழியே என்றென்றும் நிலைத்திருக்கும் மரபை அவர் விட்டுச்சென்றுள்ளார். இத்துயர்மிகு நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவர் மீது அன்புகொண்டோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி