சவுக்கு சங்கர் மீதான வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு

75பார்த்தது
சவுக்கு சங்கர் மீதான வழக்கு: காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு
குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12 அன்று அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் தனது உத்தரவில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பி. பி. பாலாஜி, இந்த வழக்கில் அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக ஜி. ஜெயச்சந்திரனை நியமித்து பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இன்றைக்குள் இந்த வழக்கில், சென்னை காவல் ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

தொடர்புடைய செய்தி