பேரவையில் முதல்வர், இபிஎஸ் இடையே காரசார வாதம்

82பார்த்தது
பேரவையில் முதல்வர், இபிஎஸ் இடையே காரசார வாதம்
"தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் அதிமுக சார்பில் மேற்கொள்ளப்பட்ட சட்டப் போராட்டங்களை பட்டியிலிட்டார். பின்னர், "காவிரி நீர் சம்பந்தமாக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை திறக்க வேண்டும். அதை வலியுறுத்த வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்க வேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், "நான், என்னுடைய தீர்மானத்தைப் படிக்கிறபோது, தெளிவாக படித்திருக்கிறேன். உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை பேரவை ஒருமனதாக கேட்கிறது. தீர்மானத்தில் ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன்" என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி