அரசுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது? - அண்ணாமலை கேள்வி

62பார்த்தது
அரசுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது? - அண்ணாமலை கேள்வி
தமிழக அரசுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், மத்திய அரசு, தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்துக்கும் குடும்ப ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின்.

அமைச்சரான முதல்வரின் மகன் உதயநிதி, மத்திய அரசு ரூ. 1. 7 லட்சம் கோடிதான் தமிழகத்துக்குக் கொடுத்திருக்கிறது, 29 பைசா தான் கொடுக்கிறது என்று ஊர் ஊராகப் பொய் சொல்லிக் கொண்டிருக்கையில், முதல்வர் ஸ்டாலின், ரூ. 5. 5 லட்சம் கோடி கொடுத்துள்ளது என்று கூறுகிறார்.

தமிழக அரசு பெறும் வரிப்பணத்தை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், டாஸ்மாக் வருமானம் தொடங்கி, இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப் பதிவு கட்டண உயர்வு, கொழுப்பு திருடப்பட்ட பால் விலை உயர்வு, இவை போக ஜிஎஸ்டியில் சுமார் 70 சதவீதம் நிதி என நேரடியாக தமிழக அரசுக்கு வருமானம் வருகிறது.

கடந்த 2021 தேர்தலின்போது திமுக வாக்குறுதியளித்த மூன்றரை லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் என்ன ஆனது, மதுரை எய்ம்ஸ் 2026-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வரும் என பலமுறை அறிவித்த பிறகும், எய்ம்ஸ் பற்றி உளறிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது, அறிவித்தபடி எய்ம்ஸ் செயல்பாட்டுக்கு வருவது உறுதி. அது மோடியின் கேரண்டி என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி