சென்னை வியாசர்பாடி, கணேசபுரம் சப்வே அருகே வீட்டுக்கு உணவு அருந்த வந்த பிரகாஷ் என்பவரை ராஜன் என்ற ஆட்டோ டிரைவர் போதையில் மோதி காயப்படுத்தியுள்ளார்.
அப்போது ஆட்டோ டிரைவர் ராஜனிடம், தலைமை காவலர் சஞ்சய் மது போதை பரிசோதனை மேற்கொள்ள முயன்றார். 1 மணி நேரம் பரிசோதனைக்கு உட்படாமல் போக்கு காட்டி, பிறகு மது அருந்தியது உறுதியாகி ரூ. 10, 000 அபராதம் விதித்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.