தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மலர்ச் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ ரூ. 1, 000-லிருந்து ரூ. 1, 500ஆகவும், ரூ. 300-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ தற்போது ரூ. 600க்கும், கனகாம்பரம் மற்றும் முல்லைப்பூ கிலோ ரூ. 700, செவ்வந்திப்பூ ரூ. 450, அரளி மற்றும் சம்பங்கி பூக்களின் விலை ஒரு கிலோ ரூ. 400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.