ரயில்வே பொறியியல் பணி: மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

58பார்த்தது
ரயில்வே பொறியியல் பணி: மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்
அரக்கோணம் - ரேணிகுண்டா மார்க்கத்தில், பொறியியல் பணி காரணமாக, மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல் - திருத்தணிக்கு ஜூலை 11, 13 ஆகிய தேதிகளில் இரவு 8. 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், அரக்கோணம் - திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

திருத்தணி - சென்ட்ரலுக்கு ஜூலை 12, 14 ஆகிய தேதிகளில் அதிகாலை 4. 30, 5. 30 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், திருத்தணி - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இதுதவிர, 3 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி