பிரதமர் பிப். 27-ல் தமிழகம் வருகை

66பார்த்தது
பிரதமர் பிப். 27-ல் தமிழகம் வருகை
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் 2 நாட்கள் திருப்பூர், மதுரை, தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே கடந்த மாதம் தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர், இந்த ஆண்டு 2-வது முறையாக மீண்டும் தமிழகம் வருகிறார்.

வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள அண்ணாமலையின் `என் மண், என் மக்கள்' நடைபயண நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி