வழக்கறிஞர்கள் போராட்டம் - இந்து முன்னணி கருத்து

80பார்த்தது
வழக்கறிஞர்கள் போராட்டம் - இந்து முன்னணி கருத்து
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் போராட்டம் நடத்தி வழக்கறிஞர்களின் போராட்டத்தை பின்னால் இருந்து தூண்டி வருகின்றனர். எனவே, உயர் நீதிமன்றம் தலையிட்டு வழக்கறிஞர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் புதியதாக உருவாக்கப்பட்டு ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள வழக்கறிஞர் பெருமக்கள் ஒரு சில அரசியல் கட்சிகளின் சுயநலத்துக்கு பலியாகாமல் நாடு முழுவதும் ஏற்கப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களை நாமும் ஏற்று அதற்கு ஏற்ப தயாராகி பணிக்கு திரும்ப வேண்டும் என வழக்கறிஞர் பெருமக்களை இந்துமுன்னணி அன்போடு கேட்டுக்கொள்கிறது. மேலும் உயர்நீதிமன்றம் தமிழகத்தில் 10 நாட்களுக்கு மேலாக முடிவே தெரியாமல் தொடர்ந்து நடைபெற்று வரும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் சார்பில் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி