அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: முதல்வர் ஸ்டாலின் மரியாதை

61பார்த்தது
அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: முதல்வர் ஸ்டாலின் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழாவையொட்டி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 267-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது உருவசிலை மலர் மலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே அவர் உருவப் படத்திற்கும் மலர் மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அழகுமுத்துக்கோன் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ராஜகண்ப்பன், பெரிய கருப்பன் ஆகியோர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி