17 ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள்

50பார்த்தது
17 ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள்
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களைப் போல மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மேலும் 17 ரயில் நிலையங்களில் வசதிகள் ஏற்படுத்தும் பணியை நிசான் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து தெற்கு ரயில்வே சென்னைக் கோட்டம் செயல்படுத்த உள்ளது மாற்றுத் திறனாளிகள் பிறர் உதவியின்றி செயல்படும் வகையில் ரயில்நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தை தெற்கு ரயில்வே, நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. இதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ளதுபோலவே பார்வைத் திறன் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான பிரெய்லிவழிகாட்டி வரைபடங்கள், இதர வகைமாற்றுத் திறனாளிகள் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் வசதி, மாற்றுத் திறனாளி பயணிகள் எளிதில் ஏறி இறங்குவதற்கு சாய்வுதள அமைப்பு உள்ளிட்டவசதிகள் சென்னை கடற்கரை, காஞ்சி, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட 17 ரயில்நிலையங்களில் ஏற்படுத்தும் பணிகளை நிசான் நிறுவனத்துடன் இணைந்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி, சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை கோட்ட ரயில்வே அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி