எரி உலை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

57பார்த்தது
எரி உலை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு
பொது​மக்​கள் கருத்து கேட்​புக்கு பின் எரிஉலை திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று சென்னை மாநக​ராட்சி தெரிவித்துள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யின் திடக்​கழிவு மேலாண்​மைத் துறை, வட சென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்புக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்​தில், "இந்​தி​யா​வில் 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் கழி​வு​களில் இருந்து மின்​சா​ரம் தயாரிக்​கும் ஆலைகள் வெற்​றிகர​மாக செயல்படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. 

டோக்​கியோ​வில் 19 ஆலைகள் உட்பட உலகில் 2800-க்கும் மேற்​பட்ட ஆலைகள் நிறு​வப்​பட்​டுள்​ளன. பாரீஸில் ஈபிள் கோபுரத்​தின் அரு​கில் செயல்​படு​கிறது. கொடுங்​கையூரில் எரிஉலை அமைக்​கும் திட்ட பணி​கள், பொது​மக்​களின் கருத்து கேட்பு கூட்​டம் நடத்​தி, சுற்​றுச்​சூழல் அனு​மதி பெற்ற பின் மேற்​கொள்ளப்​படும்​ என கூறப்​பட்​டுள்​ளது.

தொடர்புடைய செய்தி