4 வழிச்சாலை விரிவாக்கப் பணி: நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்

74பார்த்தது
4 வழிச்சாலை விரிவாக்கப் பணி: நெடுஞ்சாலைகள் ஆணையம் தகவல்
சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணியில், விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு இடையிலான திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புது டெண்டர் கோரப்படவுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாமக செய்தி தொடர்பாளரும், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவைத் தலைவருமான வழக்கறிஞர் கே. பாலு உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, சேத்தியாதோப்பு, சோழபுரம் வழியாக கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் செல்லும் சாலை மிகமோசமான நிலையில் இருந்தது.

2017-ம் ஆண்டு இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, 2018-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. ஆனால், 7 ஆண்டுகளாக இந்த பணி முடிவடையாமல் நிலுவையில் இருந்துவருகிறது. எனவே, சாலை சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி முடிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை சுங்கச் சாவடியில் நுழைவுக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.

தொடர்புடைய செய்தி