இந்தியா தன் ரயில் வலையமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே வருகிறது. இப்போது இந்திய ரயில்வே உலகின் 4-வது பெரிய ரயில் நெட்வொர்க் உள்ள நாடாக மாறி இருக்கிறது.
இந்திய ரயில்வே பற்றிய பல தனித்துவமான பலர் அரியாத தகவல்கள் இருக்கிறது. இன்று நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போவது குறிப்பிட்ட ரயிலில் பயணம் மேற்கொள்ள டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு கட்டணம் செலுத்தவேண்டியதில்லை என கூறப்படுகிறது. மேலும் டிக்கெட் பரிசோதகருக்கும்
வேலை இல்லை.
இந்தியாவில் ரயில்வேயின் ஒரு வழித்தடத்தில் பயணம் மேற்கொள்வதற்கு கட்டணமாக ஒரு ரூபாய் கூட வசூலிக்கப்படுவதில்லை. பக்ரா-நாங்கல் அணையை பார்க்க வரக்கூடிய பயணிகளுக்காக இந்த ரயில் பிரத்யேகமாக இயக்கப்படுகிறது. பக்ராவில் இருந்து நங்கல் வரை போகும் இந்த ரயில் ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப் எல்லைக்கு அருகில் செல்கிறது. இந்த ரயிலில் பயணிக்கக்கூடிய பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இந்த ரயிலின் பெட்டிகள் மரத்தால் ஆனவை ஆகும். இதில் TTE யாரையும் பார்க்க முடியாது.