தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9-ம் தேதி தொடக்கம்

59பார்த்தது
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 9-ம் தேதி தொடக்கம்
காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 2023-24ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி