சென்னை: ஸ்லாஸ் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

54பார்த்தது
சென்னை: ஸ்லாஸ் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது ஸ்லாஸ் எனும் மாநில கற்றல் அடைவுத்தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. 

அதன்படி நடப்பாண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு பயிலும் 15.78 லட்சம் மாணவர்களுக்கு ஸ்லாஸ் தேர்வு பிப்ரவரி 4 முதல் 6ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான மாதிரி வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்திட வேண்டும். சிக்கல்களுக்குத் தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்தலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி