அனுமதி பெறாத கட்டடத்திற்கு ''சீல்'

490பார்த்தது
அனுமதி பெறாத கட்டடத்திற்கு ''சீல்'
திருநீர்மலை, தாம்பரம் மாநகராட்சி, ஒன்றாவது மண்டலம், திருநீர்மலை, வடக்கு குளக்கரை தெருவில், கீழ் மற்றும் முதல்தளம் உடைய கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்த இடம் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருகிறது.

அதனால், தொல்லியல் துறை அனுமதி பெறாமலும், மாநகராட்சி நகரமைப்பு பிரிவில், கட்ட அனுமதி பெறாமலும் கட்டப்படுவதாக புகார் எழுந்தது. மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ததில், இரண்டு துறைகளிலும் அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், நேற்று காலை, அந்த கட்டடத்திற்கு 'சீல்' வைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி