45 அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரிகளை சீர்மிகு மையங்களாகத் தரம் உயர்த்துவதற்கு 277. 64 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. அடையாறு நிதி மறுசீரமைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த 139. 14 கோடி ரூபாய்க்கு அரசு கூடுதல் அனுமதி அளித்துள்ளது.
சட்டசபையில் இன்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2023-2024-ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்தார். அதில் இத்துணை மதிப்பீடுகள், மொத்தம் 2, 893. 15 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன. மாநிலப் பேரிடர் தணிப்பு நிதியின் கீழ், சென்னைப் பெருநகர மாநகராட்சி மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மற்றும் கடலூர் மாநகராட்சி ஆகியவற்றிற்கு மழைநீர் வடிகால் அமைக்க 304 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது.