சென்னை புறநகர் பகுதிகளில் மழை...!

83பார்த்தது
சென்னை புறநகர் பகுதிகளில் மழை...!
சென்னை மாநகரப் பகுதியில் நேற்று மாலை திடீர் மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 17 மிமீ மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக ஜனவரி மாதம் பிறந்தாலே மழைப்பொழிவு நின்று, பனிப்பொழிவு தொடங்கிவிடும். ஆனால் தற்போது பனிப்பொழிவு நிகழ்ந்து வரும் நிலையில் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் மழை பெய்தது. நேற்று காலை முதலே வட சென்னை பகுதிகளில் லேசான சாரல் மழைபெய்தது. அதன் பிறகு மாலை 3 மணி அளவில் சென்னை, புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.

மாலை 5 மணி வரை நீடித்த மழையால், பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல வேண்டிய மாணவர்கள், பணி முடிந்து வீடு திரும்ப காத்திருந்த பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி