அக். 11 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயர் அறிவிப்பு

58பார்த்தது
அக். 11 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 11 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டன்ற அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமைச் செயலகத்தில், திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று காவிரி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாளை (அக். 10), 2023-24 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவதாம் நடைபெறும்.

நாளை மறுநாள் அக். 11ம் தேதியன்று, நிதி அமைச்சர் இந்த துணை மானியக் கோரிக்கைக்கு பதில் அளிப்பார். அன்று சட்டமன்றத்தில், ஏதேனும் மசாதோக்கள் கொண்டு வந்தால், அவை விவாதிக்கப்பட்டு, அன்றைய தினமே நிறைவேற்றப்படும். ஒட்டுமொத்தமாக அக். 9, 10 மற்றும் அக். 11 ஆகிய மூன்று நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி