சென்னை: கங்கைக்கரைபுரம் பகுதியில் புதிய குடியிருப்புகள் அமைக்க அமைச்சர் உதயநிதி
ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்ப்டட கங்கைக்கரைபுரம் மற்றும் பத்திரிக்கரை ஆகிய இடங்களில் இருந்த பழைய குடியிருப்புகள் அகற்றப்பட்டு, அதே இடத்தில் புதிய குடியிருப்புகள் அமைக்க அரசு திட்டமிட்டது. அதன்படி ரூ. 62. 15 கோடி மதிப்பில் 338 புதிய வீடுகளை நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இவ்விழாவில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, எம். பி தயாநிநி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.