சென்னையில் மீண்டும் மஞ்சபை: மேயர் தகவல்

69பார்த்தது
சென்னையில் மீண்டும் மஞ்சபை: மேயர் தகவல்
மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ், 2ம் கட்டமாக 17 இடங்களில் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது, என்று மேயர் பிரியா கூறினார். அண்ணாநகர் மண்டலம், 106வது வார்டு, எம்.எம்.டி.ஏ. காலனி பிரதான சாலை, தபால் நிலையம் அருகில் 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தின் கீழ், தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரத்தை மேயர் பிரியா பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரால், சென்னை மாநகராட்சியில் 2021ம் ஆண்டு 'மீண்டும் மஞ்சப்பை' என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியும், சுற்றுச்சூழல் துறையும் இணைந்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்குமாறு விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் மஞ்சப்பை என்ற தானியங்கி விற்பனை இயந்திரம் வைத்திருக்கிறோம். 

இதன் மூலமாக, மார்க்கெட் பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்களோ, வியாபாரிகளோ, மஞ்சப்பைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 25 இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. இன்றைக்கு 2ம் கட்டமாக 17 இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

தொடர்புடைய செய்தி