ரயில் பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை: நவீன கருவி பொருத்தம்

61பார்த்தது
ரயில் பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை: நவீன கருவி பொருத்தம்
தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களாக சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் உள்ளன. வட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் எழும்பூரில் இருந்தும் புறப்படுகின்றன.

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு தினசரி 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு 75, 000-க்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த 2 ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் தரப்பில் எடுக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ரயில்வே நிர்வாகம் ஆகியன சார்பில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில், திடீர் மாரடைப்பு ஏற்படும்போது, பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.