சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆளுநர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால், திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்படும் என எச். ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவே திமுகவுக்கு மாற்றாக உள்ளதாக பாஜக மூத்தத்தலைவர் எச். ராஜா கூறியுள்ளார். இதுவரை தமிழகம் கண்டிராத அளவிற்கு, கஞ்சா புழக்கமும், வன்முறையும் இருப்பதாக விமர்சித்த அவர், ஆளுநர் மட்டும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என, மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால், தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யப்படும் என்றார். திமுக அரசு ஏற்கெனவே 2 முறை டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.