கொடுமுடி அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே, ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கொடுமுடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அடிக்கடி விடுமுறை எடுப்பதாகவும், டிஜிட்டல் எக்ஸ்ரே, ஸ்கேன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி மற்றும் புதிய ஸ்கேன் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.