சென்னை: நடமாடும் பாஸ்போர்ட் வாகனம் ஒப்படைப்பு

74பார்த்தது
சென்னை: நடமாடும் பாஸ்போர்ட் வாகனம் ஒப்படைப்பு
பின்தங்கிய, கிராமப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் சேவையை எளிதாக வழங்கும் நோக்கில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் வழங்கப்பட்டுள்ளது.வேலைவாய்ப்பு, கல்வி, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இதை கருத்தில் கொண்டு, மக்கள் எளிதாக பாஸ்போர்ட் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் எடுத்து வருகிறது.இந்நிலையில், தொலைதூரம் மற்றும் கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பாஸ்போர்ட் சேவைகள் எளிதாக கிடைக்கும் வகையில், நடமாடும் பாஸ்போர்ட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ். விஜயகுமாரிடம் இதற்கான வாகனம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி