சென்னை: விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

80பார்த்தது
சென்னை: விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. அப்போது, விமானத்தில் ரூ. 3. 6 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர். இவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குருவி என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர் யாருக்காக போதைப்பொருட்களை கடத்தி வந்தார். அவரது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி