திருமங்கலம், டி. வி. , நகரைச் சேர்ந்தவர் அருண், 25. இவர், நேற்று முன்தினம் இரவு 11மணியளவில் மது போதையில் திருமங்கலம் பகுதியிலுள்ள மத்திய அரசு வாடகை குடியிருப்பின் வெளியே நின்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக பாம்பு ஒன்று சென்றுள்ளது. போதையில் இருந்த அருண், அந்த பாம்பை கையால் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது, பாம்பு அவரின் கையில் கொத்தியதாக தெரிகிறது.
அதிர்ச்சியடைந்த அவர் அலறியடித்து, அங்கிருந்த ஆட்டோவில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று, தற்போது நலமாக உள்ளார்.
உண்மையாகவே பாம்பு கொத்தியதா அல்லது போதையில் பொய் கூறினாரா என, மருத்துவமனையில் உள்ள அருணிடம், திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.