சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - Chepauk thiruvallikeni

நெல்லை: இபிஎஸ்-வுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை:  எஸ். பி. வேலுமணி

நெல்லை: இபிஎஸ்-வுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை:  எஸ். பி. வேலுமணி

திருநெல்வேலியில் குடும்ப நிகழ்ச்சிக்காக, நயினார் நாகேந்திரனை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினேன். அதன்பிறகு எனது குடும்ப நண்பர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்பொழுது, முன்னாள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியிருப்பது வருத்தமளிக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார்.

வீடியோஸ்


சென்னை
14 வயது மாணவனுடன் ஆசிரியை உடலுறவு... 30 ஆண்டுகள் சிறை
Nov 23, 2024, 13:11 IST/

14 வயது மாணவனுடன் ஆசிரியை உடலுறவு... 30 ஆண்டுகள் சிறை

Nov 23, 2024, 13:11 IST
அமெரிக்காவில் ஆசிரியையாக பணிபுரிந்த பெண் ஒருவர் 14 வயது மாணவனுடன் உடலுறவு வைத்துக்கொண்ட குற்றத்துக்காக 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெல்லிசா கர்டிஸ்(32) என்ற அப்பெண் 2015ஆண்டு பள்ளியில் ஆசிரியையாக இருந்தபோது மாணவனுக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்களை கொடுத்து அவருடன் 20க்கும் மேற்பட்ட முறை உடலுறவு கொண்டதாக கடந்தாண்டு புகார் அளிக்கப்பட்டது. விசாரணை நடத்தப்பட்டு கடந்த ஜூன் மாதம் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மெல்லிசா கடந்தாண்டு போலீசாக பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.