ஓடவும் கிடையாது... ஒளியவும் கிடையாது; கஸ்தூரி வீடியோ வைரல்

69பார்த்தது
ஐதராபாத்தில் கைது செய்வதற்கு முன்பாக, நடிகை கஸ்தூரி பேசி வெளியிட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நான் ஐதராபாத்தில் தான் வசிக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். தினமும் இங்கு ஷூட்டிங் இருக்கிறது. நான் தலைமறைவு என்பது எல்லாம் கிடையாது. என்னுடைய செல்போன் என்னிடம் இல்லை. என்னுடைய வக்கீலிடம் தான் உள்ளது. மன உளைச்சல் அதிகமாக இருந்தது, பத்திரிக்கையாளர் தொடர்ந்து போன் செய்ததால், வாங்கி வைத்து கொண்டார்.

இப்போது கூட இந்த வீடியோவை வேறு ஒருவரின் செல்போனில் தான் பதிவு செய்தேன். நான் எப்போதும் ஓடி ஒளிய மாட்டேன்.
ஷூட்டிங் முடிந்து வந்த பிறகு, என்னுடைய ஒத்துழைப்பின் பேரிலேயே போலீசார் என்னை சென்னை அழைத்து வருகின்றனர். மீடியாவில் என்னை தலைமறைவு, பயந்து ஓடினேன், என வெளியிட்டு வருகின்றனர். இதுவரையில் எந்த விதிமீறலும் செய்யவில்லை, இனியும் செய்ய மாட்டேன். எனக்கு பயம் எல்லாம் இல்லை. தலைமறைவு என்று வெளியாகும் செய்திகளுக்கு இதுவே முற்றுப்புள்ளி என அவர் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி