சென்னை: வறுமை ஒழிப்​பில் தமிழகம் முதலிடம்: அரசு பெருமிதம்

81பார்த்தது
சென்னை: வறுமை ஒழிப்​பில் தமிழகம் முதலிடம்: அரசு பெருமிதம்
வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதற்கு மத்திய அரசு பாராட்டியுள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை சீராக நிர்வகிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாகவும், ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு 2 கிலோ அரிசி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களாலும் வறுமை முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் ஆய்வு வாயிலாக, வறுமை ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு 233 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 591 ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 40 மாதங்களில் 230 நெல் கொள்முதல் நிலையக் கட்டிடங்கள் ரூ. 100 கோடியில் கட்ட அனுமதிக்கப்பட்டு, இதுவரை 130 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ், அதிக எண்ணிக்கையில் சேமிப்புக் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காக தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்துக்கு மத்திய அரசு முதல் பரிசு வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி