தமிழக பாஜக பொருளாளர் எஸ். ஆர். சேகர் சிபிசிஐடி விசாரணைக்குஆஜர்

75பார்த்தது
தமிழக பாஜக பொருளாளர் எஸ். ஆர். சேகர் சிபிசிஐடி விசாரணைக்குஆஜர்
சென்னையில் ரயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக பாஜக பொருளாளர் எஸ். ஆர். சேகர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஏப். 6-ம் தேதி புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். தாம்பரத்தில் நடைபெற்ற சோதனையின்போது, ரயிலில் பயணித்த 3 பேரிடம், கணக்கில் காட்டப்படாத ரூ. 4 கோடி பணம் பிடிபட்டது. நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ரயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டம் டிரைவர் பெருமாள் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இன்று தமிழக பாஜக பொருளாளர் எஸ். ஆர். சேகர் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். சிபிசிஐடி அதிகாரிகள் அனுப்பிய சம்மனை ஏற்று அவர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். முன்னதாக, எஸ். ஆர். சேகரை விசாரணைக்கு அழைக்க சிபிசிஐடி அதிகாரிகள் நீதிமன்ற அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி