அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: இபிஎஸ்

62பார்த்தது
தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.  இந்த படுகொலை மிகுந்த வேதனை அளிக்கிறது. இது துரதிஷ்டவசமானது.  சிசிடிவி காட்சியில் கொலையாளிகள் தப்பி சென்றதை பார்க்க முடிந்தது. இந்த கொடூர செயலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் உண்மையான குற்றவாளி இல்லை என அவருடைய குடும்பத்தாரும், கட்சி நிர்வாகிகளும் சந்தேகிக்கின்றனர். எனவே உண்மையான குற்றவாளி யார் என கண்டறிய வேண்டும்.

உண்மையான குற்றவாளியை கண்டறிய சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.   இப்படிப்பட்ட படுகொலையை சாதாரண ஆட்கள் செய்திருக்க முடியாது. இந்த வழக்கு நடுநிலையோடு நடைபெற வேண்டும். எனவே இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி