பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக நிர்பயா திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக மத்திய அரசு நிர்பயா திட்டத்தின்கீழ் அளிக்கும் நிதியை முழுமையாகப் பெற்று அதை பயன்படுத்துவதற்கு ஏதுவாக உயர்மட்டக்குழுவை அமைக்கக்கோரி வழக்கறிஞர் ஏ. பி. சூர்யபிரகாசம் கடந்த 2019-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் நிலை அறிக்கைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் கடந்தமுறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழக உள்துறை செயலர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நிர்பயா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கென தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.