சென்னை: உலககோப்பை தொடருக்கான போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதால், மைதானத்தை சுற்றிலும் புதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
உலககோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்நிலையில்
இந்தியா-
ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக
போக்குவரத்து மாற்றும் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண் ரசிகைகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களின் வசதிக்காக சிறப்பு மின்சார ரயில்கள், பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. இந்நிலையில் மைதானத்தை சுற்றி புதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.