பார்த்தசாரதி கோயிலில் சொர்க்க வாசல்: 500 பேருக்கு இலவச தரிசனம்

55பார்த்தது
பார்த்தசாரதி கோயிலில் சொர்க்க வாசல்: 500 பேருக்கு இலவச தரிசனம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் தரிசனம் செய்ய ரூ. 500-க்கு கட்டணச் சீட்டுகள் வழங்கப்படும் எனவும், முதலில் வரும் 500 பேர் இலவசமாக சொர்க்க வாசல் தரிசனம் பெறலாம் எனவும் அமைச்சர் பி. கே. சேகர்பாபு தெரிவித்தார். 

108 திவ்ய தேசங்களில் ஒன்றான பார்த்தசாரதி சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன. 10-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், கோயிலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, பல்வேறு துறை அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகின்ற ஜன. 10, 11 ஆகிய இரு நாட்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. காவல் துறை சார்பில் 600 போலீஸார் வீதம் 3 பகுதியாக சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மேலும், கோயிலைச் சுற்றி 32 கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி