சென்னை மேற்கு மண்டல சைபர் களம் காவல் நிலையத்தில் சமூக வலைதளங்களில் சிக்னல் என்ற செயலியில் குழு ஒன்றில் குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதாக புகார் எழுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்க ரகுநாத் ரெட்டி வயது 22 என்பவர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஹரி வயது 23 என்பவரையும், மதுரையைச் சேர்ந்த நவீன் ஷங்கர் வயது 25 என்பவரையும் கைது செய்தனர்.