தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 1,200 டிரைவர், நடத்துனர்கள் நியமனம் செய்யப்பட உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விழுப்புரம் கோட்டம் சார்பில் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய பஸ்கள் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.